Wednesday, October 29, 2008

கல்கி இதழில் என் கவிதை

நண்பர்களுக்கு வணக்கம்.

இவ்வார கல்கி இதழில் வெளியான என்னுடைய மூன்று கவிதைகளை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

கல்கியில் வெளியான கவிதைகள்

(மேலுள்ள சுட்டியின் மூலம் கவிதையை படிக்க இயலாதவர்களுக்காக,கல்கியில் வெளியான கவிதைகளை இங்கே பிரசுரிக்கிறேன்)

குழந்தைகளின் உலகம்

1. கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

2. அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

3. மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

**********************************************************************************

எப்போதும்
எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

17 comments:

said...

Hello Boss,

Am getting "Document Not Found" error.

Please have a check on this.

Satheesh Jayabalan

said...

hi nila rasigan..
i also can't read the poem that you currently uploaded..Its shows error.By the way, thanks for telling the grammer mistake.Thanks a lot.Take care.

said...

Nila,
File not found error,pls resolve it

said...

Satheesh,Vinothene,Partha..

Thanks for bringing this to my attention.

I have posted the poem.

Nandrigal pala.

said...

கவிதை அருமை. இங்கும் குளிர் வர ஆரம்பிக்க, எங்க வீட்டு மீனுக்கு குளிருமா என்று எண்ணியதுண்டு. உங்கள் கவிதை வாசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

said...

all the 3 poems are very well.
great.

said...

அருமை. உங்கள் தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள் .

சதீஷ் ஜெயபாலன்
முசிறி

said...

ம்ம்ம்..மீண்டும் மழைக் கவிதைகள்....
அத்தனையும் அருமை.
வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

said...

hi nila rasigan...
wonderful poem that was...
Its something usual things that always happened in around us.but..never notice those beautiful things..
but u had..congrats..
and one more..thanks for the corection..i glad to know my mistake,so that i can corect it.
You are right.சுட்டிக்காட்டுவதல் வேண்டும்.இது எனது வேண்டுக்கோள்.
நன்றி.

said...

hai..
amma kodutha "thuvaalaiyal"
"thuvaalaiyal" ethan artham enakku
puriyavillai.
kavalaipadatha appa unnai
adikka mattar
arumai.

Anonymous said...

ungal kavidhaigal migavunm arumayaga ulladhu nanbare....
idhu thodara en ulamarndha valthukal...
ungal kavidhaigalai virumbi vasikkum nanban

harisudhan

said...

கவிதை நல்லா இருக்கு.

Sari eppadi irukeenga?
Ennoda mail innum paakalaya?

said...

நான் சொல்ல கேட்ட உன் பெருமைகளை இவ்வுலகமெல்லாம் கேட்கட்டும்
சொல்ல மறந்த இவ்வுலகம் இனி ஊமையாகிப்போகும்.
அவதாரம் அது கல்கி உன் படைப்பையும் ஏற்றது போலும்,
இனி உன் சிந்தனை மட்டும் தமிழ் படைப்புகளில் மேலோங்கும்.

பரவட்டும் உன் சிந்தனை பேரொளி எட்டுத்திக்கும்
இனி தமிழ் குருடருக்கும் தமிழார்வம் பிறக்கும்.


என் துயர் துடைக்கும் என் ஆருயிர் நண்பணே!
சொல்லவா உனக்கு என் பேரின்பம் என்னவென்று?

நிலாரசிகனுக்கும் இந்நாடு சந்ராயன் விண்கள‌த்தை பரிசக்கவேண்டும்!!


அன்புடன்

அனுஷாதாசன்.

Anonymous said...

மழையை ரசிப்பதில் இருவகை உண்டு ...

உடலும் உள்ளமும் முழுதாய் நனைய...
மழை துளிகளிலே மனதையும் கரைய விடுவது ஒரு வகை..

ஜன்னல் ஓர சாரலை மெலிதாய் ருசித்து..
உள்ளம் பரவும் குளிர்ச்சியை ரசிப்பது மற்றொரு வகை....

மூன்றவதாகவும் ஒரு வழி உண்டென்று அறிந்தேன்...
நண்பனே உன் மழை கவிதைகள் மூலமாய்....

பாராட்டுகள்.......

said...

Hi Nila, Poem about rain is very nice.

Anonymous said...

vaazhthukkal Nila.

said...

pidichchirukku:)