Tuesday, June 09, 2009

கேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு
என்னை தொடர் பதிவிற்கு அழைத்த சகபதிவர்,தோழி 'உயிரோடை' லாவண்யாவிற்கு நன்றி.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இது எனக்கு நானே சூடிக்கொண்ட பெயர். இயற்பெயரை போலவே புனைப்பெயரும் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நவம்பர் 2008

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்காது. எவ்வளவு முயன்றாலும் கோழி கிண்டுவது போலிருப்பதால்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

சிக்கன்/மீன் குழம்பு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஒரு குட்டிக்கதை சொல்லவா?
ஆலமரமொன்றை தேடி ஓராயிரம் கிளிகள் வந்தபோது அந்த ஆலமரம் நினைத்ததாம் எல்லோரும் என்னுடனே தங்கிவிடும் என் நண்பர்களென்று. வந்த கிளிகளில் சில பழம்தின்றபின் பறந்தோடின. சில ஆலத்தில் எச்சமிட்டு பறந்தன.சில ஆலத்தில் துளையிட்டு சிறிதுகாலம் தங்கிவிட்டு பின் ஒன்றுமே நடவாத முகபாவனையில் விட்டுச்சென்றன. பல காலம் கழித்தே ஞானம் பெற்றது ஆலம். தன்னைத் தேடி வருகின்ற கிளிகள் தனித்து நிற்கும் தனக்காக வரவில்லை தன் பழத்திற்காக மட்டுமே வந்தன என்று புரிந்துகொண்டது ஆலமரம்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில். சிறிய வயதில் அடிக்கடி பயணிப்பது குற்றாலமும்,அகத்தியர் அருவியும். குளிக்க நினைத்து முடியாமல்
சாரலில் நனைந்து சிலிர்த்தது நயாகராவில்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆணாக இருந்தால் கண்கள். பெண்ணாக இருந்தால் கண்களும் , கைவிரல்களும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது : எல்லோரிடமும் எளிதில் பழகுவது
பிடிக்காதது: பழகும் எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவது.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என் சரிபாதி என் கவிதைகள். கவிதையிடம் பிடிக்காத விஷயமே இல்லை :)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

நீலம்.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

"கடவுள் தந்த அழகிய வாழ்வு"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

முட்டாள்த்தனமான கேள்வியாக படுவதால் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை.(கேள்வியில் பிழையும் இருப்பதால்...அதென்ன "பேனாக்களாக"!!!)

14.பிடித்த மணம்?

புதியதாய் வாங்கிய புத்தகத்தின் மணமும்,மண்வாசமும்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

விழியன் ‍- இணையத்தில் அறிமுகமாகி இதயத்தில் இணைந்தவன்.சிறந்த கவிஞன்/புகைப்படக்கலைஞன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

லாவண்யாவின் அனைத்து கட்டுரைகளும் யோசிக்க தூண்டும் விதமாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்தது ஊர்மிளை பற்றிய கட்டுரை.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்(கேள்வியை உயிரில் கலந்த விளையாட்டு என்று மாற்றியிருந்தால் இந்த பதில் இன்னும் அதிகமாக பொருந்தி இருக்கும்.)

18.கண்ணாடி அணிபவரா?

வாட்ச்,மோதிரம்,கண்ணாடி,செருப்பு எல்லாம் அணிபவன்..அடபோங்கப்பா நல்ல கேள்விக்கு நடுவுல இதுமாதிரி சொதப்பல் கேள்வி உயிரை எடுக்குது.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மனதை தொடுகின்ற அனைத்து திரைப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

A walk to remember

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம்.


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

The book of Tells - by Peter Collet

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாதம் இருமுறை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: கடந்து செல்லும் ரயிலின் சத்தம்
பிடிக்காதது: காதோரம் சத்தம்போட்டு யாராவது பேசினால்/கத்தினால்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சியாட்டல்,அமெரிக்கா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

முப்பது குரலில் பேச முடியும்.கல்லூரி நாட்களில் மிமிக்ரியில் பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கை துரோகம்.நட்பில் பொய்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

தாஜ்மஹால்,ஊட்டி.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மொழிகளை துறந்து மெளனியாக.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

கேள்வி எண். 9க்கு செல்லவும். கவிதையின்றி செய்ய விரும்பும் காரியம் கடற்கரையில் நடப்பது.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இதுவும் கடந்துபோகும்.

19 comments:

said...

/32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இதுவும் கடந்துபோகும். /

உண்மை தான்

said...

ந‌ன்றி நிலார‌சிக‌ன். ந‌ல்ல‌ ப‌தில்க‌ள். கேள்வி 5 க்கு சொன்ன‌ க‌தை நெஞ்சைத் தொட்ட‌து. ஆனா எல்லா கிளிக‌ளையும் ஒரே மாதிரி நினைத்து ஏமாந்து போக‌ வேண்டாம். கேள்வி 30க்கான‌ ப‌திலும் நெஞ்சைத் தொட்ட‌து. ப‌தில் 31, 32 அருமை.

said...

சுவாரசியமான கேள்விகள்... அருமையான பதில்கள். லாவன்யாக்கா கலக்குறாங்க!!

said...

kadaisik kelvikkaana bathil rembap pidiththathu..nila!

said...

yenakkum oru kelvi..
naan ippo sila naatkalaagath thaan unga blogger i vaasikkiren.
"thamizhukku nilaventru per"-nu banner il irunthathai maatri vitteergale? appappo athai change seithuviduveergala?
athu remba nalla choice.. athai select seithatharkkaaga vaazhthukal..nila..

said...

SUPERB SIR,,,,,,,,,,,,,,

said...

அண்ணா கம்பெனி கணினிக்கு உடம்பு சரியில்லை
அதான் லேட்டாயிடுச்சி


//நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஒரு குட்டிக்கதை சொல்லவா?
ஆலமரமொன்றை தேடி ஓராயிரம் கிளிகள் வந்தபோது அந்த ஆலமரம் நினைத்ததாம் எல்லோரும் என்னுடனே தங்கிவிடும் என் நண்பர்களென்று. வந்த கிளிகளில் சில பழம்தின்றபின் பறந்தோடின. சில ஆலத்தில் எச்சமிட்டு பறந்தன.சில ஆலத்தில் துளையிட்டு சிறிதுகாலம் தங்கிவிட்டு பின் ஒன்றுமே நடவாத முகபாவனையில் விட்டுச்சென்றன. பல காலம் கழித்தே ஞானம் பெற்றது ஆலம். தன்னைத் தேடி வருகின்ற கிளிகள் தனித்து நிற்கும் தனக்காக வரவில்லை தன் பழத்திற்காக மட்டுமே வந்தன என்று புரிந்துகொண்டது ஆலமரம்.//


//ஆனா எல்லா கிளிக‌ளையும் ஒரே மாதிரி நினைத்து ஏமாந்து போக‌ வேண்டாம்//

நாங்கள் கிளிகலள்ள விழுதுகள் .

said...

நன்றி ஒளியவன்,ரசிகை மற்றும் நீலன்.

said...

//yenakkum oru kelvi..
naan ippo sila naatkalaagath thaan unga blogger i vaasikkiren.
"thamizhukku nilaventru per"-nu banner il irunthathai maatri vitteergale? appappo athai change seithuviduveergala?
athu remba nalla choice.. athai select seithatharkkaaga vaazhthukal..nila..//

அன்புள்ள ரசிகை,

இந்த வலைப்பூ துவங்கிய நாளிலிருந்து "தமிழுக்கு நிலவென்று பேர்" என்று
மட்டும்தான் வைத்திருந்தேன்.
இரு நாட்களுக்கு முன் இங்கே நல்ல மழை. மழைநின்ற பின் உடனே வெயிலடித்தது
அப்போது சன்னல்வழியே ஒரு பூ உதிர்வதை கண்டேன். முன்பு நானெழுதிய அவ்வரிகள்
நினைவில் மலர்ந்தன. உடனே அதை வலைப்பூவில் இணைத்துவிட்டேன். இனி அடிக்கடி
வேறு வேறு வாசகங்கள் காணலாம். :)
உங்களது கூரிய பார்வைக்கு நன்றிகள்.

said...

////ஆனா எல்லா கிளிக‌ளையும் ஒரே மாதிரி நினைத்து ஏமாந்து போக‌ வேண்டாம்//

நாங்கள் கிளிகலள்ள விழுதுகள்//


தம்பி,

நீ பறந்துசெல்லும் கிளி அல்ல, விழுது என்பதை
நம் கல்லூரி நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.
எப்படி மறக்க முடியும் அந்த பவித்திர நாட்களை..
மரத்தடி இலக்கியம்...மனம்தொடும் தாவணிகள்...உயிர்தொட்ட‌
உறவுகள்..சிலிர்த்திடும் நட்பு...சிவந்தவிழி பிரிவு...நினைத்தாலே
இனிக்கிறது...இதயம் கனக்கிறது.

said...

நன்றி மச்சி.

http://vizhiyan.wordpress.com/2009/06/09/32-questions/

said...

//என் சரிபாதி என் கவிதைகள். கவிதையிடம் பிடிக்காத விஷயமே இல்லை :)//

சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்!!!!

said...

பதில்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

said...

o..appadiya!!

said...

அண்ணா நான் சொல்லவந்தது
விழுதுகளாக நாங்கள் இருக்கிறோம் கிளிகள் பற்றிய
கவலை வேண்டாம் .


வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!அண்ணா இது நல்லா இருக்கு
இந்த மாதிரி மற்றிக்கொண்டிருங்கள்
அருமையாக இருக்கும் .

முத்தலிப் said...

ம்ம்ம்... வார்த்தைகள் சேர்ந்தது கவிதைனு நானே சொல்லி கேள்வி பட்டிருக்கேன்... இங்க கவிதைகள் சேர்ந்து வார்த்தை ஆகிருக்கு... அண்ணா கலக்குறீங்க போங்க... விருது மண்ணின் விருதே..

said...

அருமையான பதில்கள்.... வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள்... தங்களின் ப்ளாகை பாலோ செய்யத் தொடங்கிவிட்டேன்...

said...

வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் நன்றிகள்.