Thursday, July 02, 2009

மனதை உலுக்கிய கடிதம்..

என்னுடைய உறுபசி கதை வலைப்பூவில் வெளியிட்ட பின்னர் ஒரு பெண்ணிடமிருந்து கடிதமொன்று வந்தது. அந்த கடிதத்தை அவருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே இங்கே வெளியிடுகிறேன்.மனித இனத்தில் பிறந்தாலும் மிருகமாகவே வலம் வரும் சில "ஜந்து"க்களுக்கு இந்தக் கடிதம் சமர்ப்பணம். அந்த முகம்தெரியாத சகோதரி தற்சமயம் நலமாக வாழ்கிறார் என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

*********************************************

Hi..
I don mind sayin u my story as i hope it may help some gal somewhere.
இந்த அழகான பூமிக்கு நான் வந்த நாள் October 20,1986. அம்மாக்கும் அவ்வாக்கும்( பாட்டி) இருந்த ஏதோ ப்ரச்சனைல என்ன 'வா' ன்னுகூப்பிடகூட யாரும் இல்லாம வீட்டுக்கு வந்தேன். 3 yrs வரைக்கும் என் Life எப்படி போச்சுனு தெரியாது. எங்க ஊர்ல நல்ல Schoolஇல்லன்னு என்ன அவ்வா வீட்லயே அண்ணன்கூட படிக்கட்டும்னு(He was studying 5th) அங்க கொண்டு போய் விட்டாங்க.அண்ணன்கூட இருந்த அந்த இரண்டு வருஷமும்(L.K.G & U.K.G) வாழ்க்கை அவ்வளவு அழகா இருந்துச்சி. அப்போல்லாம் எனக்கு'அம்மா' ன்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அம்மாகூட நான் இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ அதைவிட அதிகமாவே எங்கஅண்ணன் என்ன பார்துக்கிட்டாங்க. அண்ணன தவிர என்னுடைய குதிரைவண்டி ஓட்டுநரின் பாட்டை தவிர வேற எதுவுமே எனக்குபெருசா தெரில. அதனால நான் அதிகமா யார்கிட்டயும் பேசினதில்ல. அண்ணனுடைய school ல 6th வரைக்கும்தான் இருந்தது.அதனால அண்ணன வேற schoolக்கு மாத்தனாங்க. அண்ணன் daily busல போய்ட்டு வரனும். ஒரு வருஷம்தான் அங்க இருந்தாங்க.தினமும் அவ்ளோ தூரம் போக கஷ்டமா இருக்கும்னு வேற ஊர்ல hostelல சேர்த்துட்டாங்க. அப்புறம் நான் மட்டும் எதுக்கு அங்கஇருக்கனும்னு என்னையும் ஏதோ தூரத்து சொந்தமான ஒரு அக்கா வீட்டுக்கு போய் அவங்க பையன்கூட(என்னைவிட ஒரு வயதுஇளையவன்) படிக்கட்டும்னு அனுப்பிட்டாங்க.
அம்மாகூட நான் இல்லாததால அம்மாவ விட்டுட்டு போற வலி தெரியல. ஆனா அண்ணன இதுக்கு அப்புறம் எப்போ பார்ப்போம்னுநினைச்சிகிட்டு அழுதுடே போனன். அந்த அக்காவும் அண்ணன மாதிரியே என்ன நல்லா பார்த்துப்பாங்கன்னு நம்பிக்கையா இருந்தன். ஆனாஅங்க எல்லாமே தலகீழா நடந்துச்சி. ஏதோ நான் சம்பளம் இல்லாத வேளைக்காரி மாதிரி இருந்தன். அக்கா சொல்ற எல்லா வேளையும்செய்யனும். ஏதாவது தப்பா செஞ்சா அடி பயங்கரமா விழும். அவங்க எல்லாரும்(அக்கா, மாமா, அவங்க பையன்) ஒன்னா இருப்பாங்க.அவங்க சாப்பிட்டு முடிச்ச அப்புறம்தான் நான் சாப்பிடனும். அவங்க இருக்கற இடத்துக்கு நான் போனா எதாவது வேளை குடுத்து என்னவெளிய அனுப்பிடுவாங்க. அதனாலயே நான் தோட்டத்துலயோ இல்ல வராண்டாலயோ தான் இருப்பன். மதியம் lunchகு வீட்டுக்குவரும்போது என் friends கொஞ்சம் பேரு அவங்க அம்மாகூட அக்கா வீட்டுக்கு தான் சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க. (As it s near to school).எல்லாரும் ஒன்னா hallல சாபிடுவாங்க. நான் மட்டும் தனியா kitchenல சாபிடுவன். எல்லார்கிட்டயும் நான் அவங்களோட சாபிட்டா lateஆசாப்பிடுவன்னு சொல்லுவாங்க. அதனாலயே எனக்கு அங்க யாரையும் பிடிக்காம போய்டுச்சி. நான் leaveக்கு ஊருக்கு வரும்போதும்யார்கிட்டயும் அவ்வளவா பேசமாட்டன். (though i had a dozen of friends thr) யார பார்த்தாலும் பயப்படுவன். அம்மாவும் அக்காமாதிரிதான் இருப்பாங்கன்னு அம்மாகிட்டகூட போகமாட்டன்.
1st std leave முடிஞ்சு மறுப்படியும் அங்க போனன். Then it was even worse than my 1st std. நான் ஏன் இலைச்சுட்டன்னு அம்மாஅக்காகிட்ட கேட்டிருக்காங்க. அதுக்கு எனக்குதான் அடி விழுந்துது. நீ அம்மாக்கிட்ட என்ன சொன்ன. அதனாலதான் அவங்க அப்படிகேட்டாங்கன்னு என் உசுர வாங்கிட்டாங்க. மணல வச்சு தொடைல கில்லுறதுல இருந்து dress இல்லாம வெளியில (அதுவும் school busபோகற நேரத்துல) நிக்கவைக்கற வரைக்கும் எவ்வளவோ கொடுமை.
இப்படியே போய்ட்டு இருந்த lifeல நான் எதிர்பார்க்காத அந்த நாள் வந்துச்சி. எப்பவும் நான் தனியாதான் தூங்குவேன். Sofa காலடி தான்என்னுடைய துணை. Night தூங்கினா அதோட காலைல மாமா கதவு திறக்கற சத்தம் கேட்டுதான் எந்திரிப்பன். அப்படிதூங்கும்போதுதான் ஒரு நாள் என் மேல ஏதோ ஊர்ர மாதிரி இருந்துது. கருப்பாம்பூச்சின்னு நினைச்சு ரொம்ப பயந்தன். கண்ண இருக்கமாமூடிக்கிட்டு பயந்துகிட்டே படுத்துட்டிருந்தன். அது கைவிரல் மாதிரி இருந்துச்சி. அப்புரம் பேயோன்னு நினைச்சன். கண்ண திறக்கவும் பயம்.அக்காவ கூப்பிட அதுக்குமேல பயம். எனக்கு இருந்த தூக்கத்துல ஒன்னும் பன்னாம அப்படியே தூங்கிடலாம்னு கூட நினைச்சன். கொஞ்சநேரத்துல அது பேய் இல்லன்னு confirm பன்னிகிட்டன். ஒரு கட்டத்துல என்னால வலி தாங்கமுடியாம லேசா கண்ண திரந்து பார்த்தன்.இருட்டுல ஒரு ஒருவம்தான் தெரிஞ்சுது. ஆனா யாருன்னு தெரியல. நான் பயத்துல அழுவ ஆரம்பிச்சுட்டன். என் அழுக சத்தம் கேட்டு"ஒன்னும் இல்ல அழுவாத. நான் தான்" னு சொல்லிட்டு போய்ட்டான். என்ன நடந்ததுன்னும் தெரியாம யார் அதுன்னும் தெரியாம nightஎல்லாம் அழுதுகிட்டே இருந்தன். அடுத்த நாள் காலைல யாரோ புதுசா ஒருத்தர் இருந்தார். அக்காதான் அது அவங்களோட தம்பினுசொன்னங்க. அப்போ இந்த கழுதைக்கு(அங்க என்ன அப்படிதான் கூப்பிடுவாங்க) முறை எல்லாம் தெரியாது. Night நான் பார்த்தது இவங்களதானா இல்ல வேற யாராவதான்னு ஆயிரம் குழப்பம். அழுது அழுது யோசிச்சி யோசிச்சி எனக்கு காய்ச்சல் வந்ததுதான் மிச்சம். அதுவே இரண்டுநாள்ல மஞ்சள் காமாலைன்னு தெரிஞ்சுது.
அப்போ
அவன் மறுபடியும் வந்து அன்னைக்கு night நடந்தது எதையும் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு மிரட்டிடு போய்ட்டான். அதையெல்லாம்சொன்னா அக்கா அடிப்பாங்களோன்னு நானும் சொல்லல. Jaundice வந்ததால என்ன வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. கொஞ்ச நாள்லQuarterly leave வந்துச்சி. அப்போ எங்க தெருவுல எல்லா பிரண்ட்ஸ்ம் ஒன்னா விளையாடுவோம்(விளையாடுவாங்க). அப்போ அங்க என்பக்கத்து வீட்டு அண்ணன் என்மேல ரொம்ப பாசமா இருந்தாங்க. I really got terrified on every guys i see. Little by little he made me understand his affection. I felt as my brother is back. நாங்க எல்லாரும் ஒன்னா இருக்கும் போது எல்லாம் அவங்க எங்கூட தான் இருப்பாங்க. அவங்களுக்கு என்மனசுல ஏதோ பிரச்ச்னை இருக்குன்னு தெரிஞ்சி எஙகிட்ட நோண்டி நோண்டி கேட்க ஆரம்பிச்சாங்க. எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அக்காரொம்ப அடிக்கராங்க, எனக்கு அம்மாக்கிட்ட சொல்லவும் பயமா இருக்குன்னு சொன்னன். நான் அம்மாக்கிட்ட சொல்லிக்கறன். நீ பயப்படாமஇருன்னு சொன்னாங்க.
அப்புறம் மறுபடியும் அந்த நரகத்துக்கு வந்தன். அப்படியே போய்ட்டு இருந்துச்சி. திக்கு தெரியாத நேரத்துல எப்பவாச்சும் சனி ஞாயிறு (He was a engg student then) அவன் வந்து என்ன கசக்கி பிழிஞ்சுசுட்டு போவான். எங்க ஊர்ல அந்த அண்ணன் தாத்தாகிட்ட (அவங்களும்தாத்தாவும் நல்ல நண்பர்கள்) ஏதேதோ சொல்லி தாத்தா அம்மாக்கிட்ட சொல்லி அம்மா அப்பாக்கிட்ட சொல்லி ஒருவழியா அடுத்த வருஷம்விழுப்புரத்துல(My native s near Villupuram) சேர்த்துக்கலாம்னு சொன்னாங்க.
Then life was good thr from my 3rd std. It was the first time that am staying with my parents & my sweet brother. Bt still i couldn't find comfortable with them. Thr was something within my heart that was a barrier between us. It took almost 2 or 3 yrs to get back my life.
Long after when i came to know from my friends abt the relationship b/w a men n women i was terribly shocked knowing wat was happened to me. I became like a mad. I started hating every men i look. Even my brother & father. Life was very worse. I won't talk wit any1. I dono the way to show my anger. Then it turned towards sports. I started participating in every event as i've to win everything. As i hated humans i started loving games since i'll be fighting with humans.
Soon after i became a football player representing my school team. It was my football coach(Although he's a men) who changed my thought and every wrong thinkings i had. Also two of my friends Sahul & Karunagaran changed me a lot and made me to concentrate in my studies. Karunagaran was the first guy i was talkin in school. Only b'cos of him i changed my thought of guys. Now my life s jus the reverse. Living happily with my family & friends(Also ur poems). Jus NJoying every minute.

Regards,
XXXXX

P.S: நண்பர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

27 comments:

said...

ரொம்ப உருக வைத்துவிட்டது நிலா. நீ சொன்னது போல, இப்போது நலமாக இருக்கின்றார்கள் என்பதே ஆறுதல்.

said...

அதிலுள்ள பெயர்களை மாற்றி விட்டீர்களா? ஏனெனில் தன்னுடைய நண்பர், துரோகி என அவர் குறிப்பிட்ட பெயரினவர் இதைப் பார்க்க நேர்ந்து, அல்லது அந்தப் பெயரினரைக் கொண்டு அந்த நபர் யாரென்று ஊகித்து அவரை சிலர் தொந்திரவு செய்யக் கூடும்.

அந்தச் சகோதரி நலமாய் இருப்பதில் பெருமகிழ்ச்சி. அவருக்கு அந்த நிலையை ஏற்படுத்திய அந்த நாய்க்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்.

said...
This comment has been removed by the author.
said...

@விழியன்,

அந்த மகிழ்ச்சி எப்பொழுதும் அவர்களது வாழ்வில் இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுதல்.

@ஒளியவன்,

பெயர்களை அவர் மாற்றித்தான் அனுப்பி இருக்கிறார் என்றே எண்ணினேன். ஆயினும் இப்பொழுது நானே அந்த பெயர்களை மாற்றிவிட்டேன்.

said...

எப்பா இதுவே ஒரு உருக்கு உருக்கிடுச்சு நண்பா..

இப்போ நல்லா இருப்பது மன்நிறைவை கொடுக்குது

என்ன ஒரு வலி இருந்தா இப்படி ஒரு கடிதம் வரும்..

உன் கதை அதில் ஒரு பங்குவகித்து அவங்களுக்கு ஒரு ஆறுதலாய் அவங்க ஆதங்கத்தை பகிர்ந்துக்க ஒரு நல்ல தோழனாய் அந்த நிலா எழுதிய கதை இருக்கு... இது ஒரு மிக சிறந்த வடிகால் இப்போ கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்

அந்த தோழிக்கு சொல்லுவது...
பழசை மறந்து சின்ன சிட்டாய் சிறகு விறித்து சிரிப்புடன் வளம் வாருங்கள்

உங்க வாழ்க்கையில் சந்தோசம் மட்டுமே இனி இருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்

நன்பன் சுரேஷ்

Arunkumar MCA said...

ரொம்ப நாள் கழித்து மீண்டும் இரு சொட்டு கண்ணீர்த்துளி அண்ணா.. இப்படியும் இருப்பாங்களா??.

said...

kodumaiyaana anupavangal...

ippothu nalam yenbathil mattume aaruthal..!

said...

குட் டச் பேட் டச் எல்லாம் சொல்லி கொடுக்கிறோம் ... பல குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காம எது தப்பானா தொடுதல் என்று தெரியாமல் போயிடுது ..

said...

இப்போவெல்லாம் ஒரு கொழந்தைய சும்மா கூட கொஞ்ச முடியாது, ஒரு சின்ன Hi சொல்ல முடியாது...எல்லாம் இந்த மாதிரி மிருகங்கலால தான்...

அந்த சகோதரி மகிழ்ச்சியாய் வாழ்வதில் மனதிற்கு அமைதி...

said...

படித்தவுடன் ரொம்ப மனசுக்குக் கஷ்டமாக இருந்தது....

said...

:(

said...

very horrible. isolation and this kind of treatment in child hood is very very horrible((((.

Kalaivani said...

அப்பெண் என்றும் நலமுடன் வாழ என் நெஞ்சார்ந்த பிராத்தனைகள்..

said...

//Karunagaran was the first guy i was talkin in school. Only b'cos of him i changed my thought of guys//

Hats off Karunagaran & Football coach

said...

நிஜத்தில் பல சிறுமிகள் இவ்வகை தொல்லைகளாலும் சொல்லவொண்ணா துயரங்களாலும் காயப்பட்ட வண்ணம் தான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பெண்ணையும் கேட்டுப் பார்த்தால் பத்தில் எட்டு பேருக்கும் மேல் இப்பிரச்சனைகளைச் சந்தித்த வலியோடும் வடுவோடும் அவர்கள் ஆமோதிப்பார்கள்.

என்று திருந்துமோ மனித சதை திண்ணும் கூட்டம்...???!!

உங்கள் கதை மூலம் ஒருவருக்கு ஆறுதல் கிட்டியிருக்கிறதெனில் மகிழ்ச்சி. அதனினும் மகிழ்ச்சி அவர் இன்று நலமோடும் மகிழ்வோடும் வாழ்கிறார் என்பது..

அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள். என்றும் மகிழ்வும் வளமும் நலமும் குன்றாமல் நீளட்டும். வாழ்வு பூக்கட்டும். :)

அன்புடன்,
பூமகள்.(நிலா ரசிகரின் நெடு நாள் ரசிகை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.)

said...

வலி நிறைந்த கடிதம், நிம்மதியான முடிவு ஆனால் அந்த மனதில் உள்ள அந்த ஊமையின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

said...

அவரை மீட்டெடுத்த அவரது நன்பர்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்..

ஒரு வாய்ப்பு கொடுங்களேன். அந்த சைல்ட் அப்யூஸ் நாயை ரெண்டு சாத்து சாத்திக்கறேன். (அவன் அட்ரஸை மட்டும் மின்னஞ்சல் செய்யமுடியுமா)

said...

//என்ன ஒரு வலி இருந்தா இப்படி ஒரு கடிதம் வரும்..

உன் கதை அதில் ஒரு பங்குவகித்து அவங்களுக்கு ஒரு ஆறுதலாய் அவங்க ஆதங்கத்தை பகிர்ந்துக்க ஒரு நல்ல தோழனாய் அந்த நிலா எழுதிய கதை இருக்கு... இது ஒரு மிக சிறந்த வடிகால் இப்போ கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்

அந்த தோழிக்கு சொல்லுவது...
பழசை மறந்து சின்ன சிட்டாய் சிறகு விறித்து சிரிப்புடன் வளம் வாருங்கள்//

சுரேஷ்,
கண்டிப்பாக அந்த சகோதரி சிறகு விரித்து "வலம்" வருவார் வளமாக இருப்பார் என்று நம்புவோம்.

said...

உருக்கமான கடிதம்,

அந்தத் தோழிக்கு - மேலும் வாழ்வில் சாதிக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்நிலையிலாவது வாழ்க்கையை உணர்ந்துகொண்ட அவரது புரிதலுக்கும், அதை உணர்த்திய நண்பர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

nila sky said...

its true.........bz in my frnd life also it was happened.....nw a days only she knew the truth....... in her child life GOD save her............the real life we need a AANIYAN to punish the guys

said...

சில கதறல்கள் கேட்பதில்லை நிலா...
கதறியவள் சொல்கின்ற வரை..

said...

Itz happening all over the world... there is a recent movie "achamundu achamundu" which deals with such an issue... parents are to be blamed in every case

If itz a girl then itz her mothers responsibility to teach her child abt how to behave to strangers or what to do when a stranger touches her private parts... mostly girls r targetted.

The bastards involving in such things should be torchered to the core and should be sentenced to death

said...

//The bastards involving in such things should be torchered to the core and should be sentenced to death//

Raja,

Hope you forgot that we are in 'India'. We should have born in a Arab country to see these kind of punishment.

said...

இதைப்படிக்கும் பொழுது என்னால் கண்ணிரை அடக்கமுடியவில்லை... என்ஏன்றால் வரதட்சணை கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்ட நான் பெண்உருவில் இருக்கும் மிருகத்திற்க்கு பயந்து தப்பித்து (என் குழந்தையை பிறந்தபொழுது பார்தது) எனது குழந்தையை பிரிந்து வந்துவிட்டென்... எங்கு என் குழந்தைக்கும் இதுபோல் நிலமை ஏற்படுமோ என்ற கொடுமையான கற்பனை...

இன்று நாட்டில் மிக அதிகமாக பாதிக்கப்படுவது ஏழைகளைவிட விட குழந்தைகள் தான்... ஆண்டு ஒன்றுக்கு தந்தையில்லாமல் சுமார் 20000 ஆயிரம் குழந்தைகள் வாழ்வதாக ஒரு ஆய்வுசொல்கின்றது (எனது குழந்தையும் சேர்த்து)

said...

நிலா, இந்த உணர்வுகளை தாண்டி இப்ப அவங்க சந்தோஷமா இருக்காங்கங்கறது நிறைவா இருக்கு மனசுக்கு.

- சித்தார்த்

said...

தம்பி

என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த சகோதரி வாழ்வில் எல்லா வளமும் பெற்று வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
(அவரது சிறு குழந்தையை கவனிக்காத பெற்றோர்களிடம் தான் தவறு இருக்கிறது)

said...

அழுது அழுது கண்கள் சிவந்ததுதான் மிச்சம். எனக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன I std படிக்கும் மகன் இருக்கிறான் ..அந்த பெண்ணின் முதல் கொடுமைகளில் dress போடாமல் தெருவில் நிறுத்துவதை படித்தவுடன் என் மகன் நின்றிந்தால், என்று மனம் சட்டென்று தாவிவிட்டது. குழந்தையை நான் அப்படி நிறுத்தியது இல்லை ஆனாலும் ரொம்ப திட்டுவேன் ...but இனிமேல் திட்டகூடாது என்று முடிவெடுத்துள்ளேன் ... நன்றி நிலா.
தேவி.