Friday, July 03, 2009

பிரஞ்சுக்காரி,ஓரினச்சேர்க்கை,கடிதங்கள் மற்றும் விகடன்
வாரம் ஒருநாள் கிரிக்கெட் விளையாட இரண்டு மைல் தொலைவில் இருக்கும் மைதானத்திற்கு செல்வது வழக்கம்.அமெரிக்கர்கள் விளையாடும்
பேஸ்பால் மைதானம் அது. இந்திய,பாகிஸ்தானிய நண்பர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். சில அமெரிக்கர்கள் ஆர்வமுடன் வந்து என்ன விளையாட்டு
இது என்று விசாரிப்பதுண்டு. சிலர் தெரிந்துகொண்டவுடன் எங்களுடன் சேர்ந்து விளையாடவும் செய்வர்.(ஆனால் பவுலிங் மட்டும் பேஸ்பால் பந்தை எறிவதை போல்
எறிவார்வார்கள்)

கடந்த வாரம் விளையாட சென்றபோது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.விளையாட வரும் நண்பர்களில் ஒருவர் அவரது அலுவலகத் தோழியையும் அழைத்து வந்திருந்தார். ஆர்வமுடன் அவரும் கிரிக்கெட் விளையாடினார்.காட்ச் பிடிக்க அவர் ஓடும்போது 7ஜி ரெயின்போ காலனியில் சோனியா அகர்வால் ஓடுவது போலிருந்தது.
ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்தவுடன் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது. கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளை காண கல்லூரி மாணவிகள் வருவார்கள். அவர்கள் முன் ஹீரோவாக ஆசைப்பட்டு ஒவ்வொருவரும் தன்னை டெண்டுல்கராக நினைத்து வீரமுடனும் வெறியுடனும் விளையாடுவோம். அம்புரோஸ் மாதிரி வேகமாக பவுலிங் போடும் ஆர்வத்தில் கீழே விழுந்து அசடு வழிந்தவர்கள் பலர். ஆனால் ஒருபோதும் பெண்களும் ஆண்களும் கலந்து கிரிக்கெட் விளையாடியதை
பார்த்ததேயில்லை.

விளையாட்டு முடியும் தருணத்தில் " Iam thirsty I need a beer" என்றாள். சிரித்துக்கொண்டோம். விளையாடி முடிந்தபின் புல்வெளியில் ஓய்வாக அமர்ந்து சிறிதுநேரம்
அரட்டை அடிப்பது வழக்கம். அன்றும் அப்படி அமர்ந்தபோது அவளை பற்றி கேட்டோம். தன் பெற்றோர் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்தவர்களென்றும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் சொன்னாள். அதன் பிறகு ஒவ்வொருவரிடமும் நீங்கள் திருமணமானவரா என்று கேட்டாள். எல்லோரும் பதிலிட்டபின் நீ திருமணமானவளா என்று அவளிடம் கேட்டோம். "No,But I committed with a woman" என்றாள். இது நடந்தது/நடப்பது இருநூறு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு கலாச்சாரம்,பண்பாடு என்று எந்தவொரு கட்டுப்பாடும்,ஒழுங்கான வாழ்க்கைமுறையும் இல்லாத அமெரிக்காவில்.

2000 வருட கலாச்சாரமும்,பண்பாடும் நிறைந்த இந்தியாவில்....தில்லி உயர்நீதி மன்றம் வாழ்க.

******************************************************************
மனதை உலுக்கிய கடிதம் பதிவில் வெளியிடப்பட்ட கடிதத்திற்கு சொந்தமான சகோதரியின் நன்றிக் கடிதம் இது.

//நன்றிகள்
கோடி நிலா..
என்
வாழ்க்கை நன்றாக அமைய என்னை வாழ்த்திய, எனக்காய் பிராத்தித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. அவர்களுடன் சேர்ந்து நேற்றுவானமும் என்னை வாழ்த்தியது -தன் பூந்தூரல்களால்.
இருபத்திரண்டு
வருடங்களாக என்னுள்ளே மருங்கிக்கொண்டிருந்த சுமையை முதன்முறையாய் உங்களிடம் இறக்கி வைத்தேன். உங்களுக்கு எழுதியகடிதத்தை நான் தாளில் எழுதி இருந்தால் அது சத்தியமாய் அழிந்துபோயிருக்கும் - என் கண்ணீராலே. அடிக்கடி அதை நினைத்துஅழுதிருந்தாலும் அன்று என் இருபத்திரண்டு வருட சோகத்திர்க்கும் சேர்த்து ஒரே நாளில் அழுது தீர்த்தேன். ஆனாலும் என் மனதில் உள்ளவடு மறையாது.
சிறுவயதில்
நான் யாரிடமும் அதிகம் பேசாததால் எனக்குள்ளே பேசிக்கொள்ள ஆரம்பித்தேன். நான் தனிமையில் இருக்கும்போது எனக்கு துனையாய்இருக்க, நான் சிரித்தால் என்னுடன் சிரிக்க, நான் அழுதால் என்னுடன் அழுக எனக்கென்று நானாகக் கண்ட துனை. அவனை/அவளை என்நண்பன், என் காதலன், என் தெய்வம் எப்படியும் சொல்லலாம். அவன் எனக்குள்ளே இருக்கும் என்னவன். என்னைப்பற்றி முழுதாய்அரிந்தவன் அவன் மட்டுமே. (நான் என்னவன் என்று உங்களிடம் சொன்னது இவனைத்தான்). ஏனோ எனக்கு இதுவரை எவரிடமும்சொல்லத் தோன்றவில்லை. அனைவரும் என்னுடன் சிறுபிராயத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களிடம் சொல்ல எனது மனதுஒப்பவில்லை. என் பாரம் உங்களால்தான் தீரவேண்டும் என்று விதித்திருந்தது போல. என்னை பகிர்ந்துக்கொள்ள செய்ததற்கே உங்களுக்குஎத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.
நெஞ்சார்ந்த
நன்றிகளுடன்,//

*******************************************************************************************

இதே பதிவை படித்துவிட்டு மற்றொரு பெண் எழுதி இருக்கும் கடிதம் இது:


//Hi ,

I read the latest post "Manathai Ulukkiya Kaditham"...It was so good..It doesn't happen only to her...It happens to most of the girls..I am one among them.May b atleast she had this torture only with 1 person..but in my life it was 3...that too when i was 5 or 6 years old..i still can't come out it..Even now am not ready for any sort of relationship..alteast she was able to say some1 and get her pblm resolved..but am not lucky enuf to tell my problems to any1....I thought am the only person..but there are many girls affected this way...This is the first time even am sharing it with u....

I feel so bad that y all guys are behaving like this...I hate all guys..very slowly am trying to come out of it...Hope i'l succeed one day..they say time heals everything its almost 18-19 years that happened..still time doesn't heal my problem..i am trying to deviate my mind and concentrate on my work..

Hope everything goes fine..i need all ur prayers and ur wishes..


Regards,//

********************************************************************************************


இதுபோன்ற அப்பாவி குழந்தைகளை பாழ்செய்யும் ஆண்களின் குறிகளை வெட்டி எறியும் சட்டம் ஏனில்லை நம் நாட்டில்? மேலை நாடுகளில் குழந்தைகள் மீதான
பாலியல் குற்றம் பற்றி பள்ளியிலேயே பாடங்கள் உண்டு. ஒரு ஆண்/பெண் எந்த நோக்கத்தில் குழந்தையை அணுகுகிறான்/ள் என்று சிறுகுழந்தைகளுக்கு புரியும் வகையில்
பாடங்கள் நடத்தப்படுகின்றன. நம்நாட்டில் இது எப்போது நடைமுறைக்கு வரும்?[மனதை உலுக்கிய கடிதம் பதிவை இளமை விகடன் 'குட் பிளாக்'ல் வெளியிட்டிருக்கிறார்கள். விகடனுக்கு நன்றிகள்]

6 comments:

Kalaivani said...

//அடிக்கடி அதை நினைத்துஅழுதிருந்தாலும் அன்று என் இருபத்திரண்டு வருட சோகத்திர்க்கும் சேர்த்து ஒரே நாளில் அழுது தீர்த்தேன்//
இனி உங்கள் வாழ்வு மிக நலமுடன் அமைய இறைவனை வேண்டுகிறேன்...

இரண்டாம் தோழிக்கு....
தனிமையை தவிர்த்து..... friends familyoda இருங்க உங்க கவலை, சோகம் குறையும்..... உலகத்துல நல்லவங்களும் இருக்காங்க... உங்க லைப் இனிமே கண்டிப்பா நல்ல அமையும்.... இறைவனை நம்புக..... நானும் உங்களுக்காக வேண்டுகிறேன்...

நிலாரசிகன்....
ஒரு பெண்ணோட வேதனை வலிகளை குறைப்பது ஒரு பெரிய விஷயம் தொடர்ந்து எழுதுங்க...... உங்க எழுத்துகளால் ஒரு பெண்ணோட கண்ணிற் குறைந்தது எண்ணி மகிழ்கிறேன்......

said...

நிலா.......

மிகப்பெரிய உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்களின் பதிவுகளின் மூலம்..... தன் துயரங்களை செவி கொடுத்து கேட்க ஒரு ஜீவன் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் என் சகோதர சகோதரிகள் இன்னும் எத்தனையோ?

என் அன்பு சகோதரிகளே.......

உங்களுக்கு ஆறுதல் சொல்லுவதை தவிர வேறென்ன செய்ய? ....... நானும் பிரார்த்திக்கிறேன் இறைவனை உங்கள் நல் வாழ்விற்காக ........

said...

உங்கள் ஆக்கங்கள் சமுதாயத்தில் இப்படியொரு பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா ??

என்று நினைக்கும் போது, சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும்,பல நேரங்களில் பொறாமையாகவும்
இருக்கிறது.

said...

படைப்புகள் பாதிப்புகளை ஏற்படுத்துவது மிகச் சொற்பமே. நிலாரசிகனுக்கு அந்த அனுபவம் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

அப்புறம் அந்த மனதை உலுக்கிய கடிதம் எழுதிய தோழி, பதில் கடிதமும் அனுப்பியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது,

வாழ்க்கையில் நிறைய படிப்பதைப் போலவே, மனிதர்களையும் படிக்க ஆரம்பியுங்கள் - மிகவும் சுவாரசியமானது இந்த படிப்பு.
நம்மைச் சுற்றி எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள்... நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடனான நமது நட்பை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கை என்றும் வசந்தமே. :)))

உங்கள் முகத்தில் ஒரு புன்னகை எப்போதும் இருக்கட்டும். வாழ்க்கையின் கலங்கரை விளக்கு அது.

said...

மிகப்பிடித்த வண்ணத்தில்
ஆடை அணிந்த இந்த மனிதனை
பிடிக்கவில்லை என் சிறுமிக்கு
காரணங்கள் சொல்ல தெரியாத இவள் மௌனத்தின் மொழியை
மொழிபெயர்க்க கூடவில்லை...!

மிருதுவான தன் கைகளால்
என் கழுத்தை பற்றிக்கொள்ளும்
அழுத்தத்தில் தெரிகிறது
இதுவரை உணர்ந்திராத ஒரு மிரட்சி

கேட்டு சலித்து மறந்த பிறகு
ஒரு விடுமுறை நாளின் மதிய உறக்கத்தில்
எழுப்பிச் சொன்னாள் "அந்த டிரைவர் அங்கிள்
உச்சா போறப்போ Disturbing me டாடி ...ஸ்கூல் போகும்போது "

என்கிற எனது பழைய கவிதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
நிறைவுறுகிறேன்
உங்கள் பணி மகத்தானது தொடருங்கள்..

said...

Hi,
/*கலாச்சாரம்,பண்பாடு என்று எந்தவொரு கட்டுப்பாடும்,ஒழுங்கான வாழ்க்கைமுறையும் இல்லாத அமெரிக்காவில்*/
அமெரிக்க கலாச்சாரத்தை எல்லோரையும் போல் நீங்களும் தவறாகக் கூறுவது நகைப்பாகத்தான் உள்ளது. எல்லோருக்கும் அவரவர் கலாச்சாரம் உயர்ந்ததுதான். ஆனால் அமெரிக்க கலாச்சாரத்தில் உள்ள நிறைய‌ சிறப்பம்சங்களை இந்தியர் யாரும் வெளியில் சொல்வதில்லை. இதில்தான் எனக்கு சிறிய வருத்தமுண்டு. அதில் முக்கியமான ஒன்றை மற்றும் கூறுகிறேன் இங்கு. மனிதனுக்கு மரியாதை என்பதுதான் அது. புதிய்வர்களைப் பார்த்தாலும் வணக்கம் பகர்வார்கள். எங்கேயும் வரிசையிலேதான் செல்வார்கள். விபத்து நடந்தால் ஐந்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து விடும். இந்த ஒரே பண்பிற்கே இன்னும் நிறைய உதாரணங்கள் கூறலாம். இதுதான் கலாச்சாரத்தின் முக்கியமான அம்சம். இது நம் நாட்டில் உண்டா.


அன்புடன்,
சோமு சுந்த‌ரம்.