Tuesday, August 18, 2009

Platinum Package கடவுள்!
1.
நேற்று:


நெல்லிக்காய்களும் கொல்லாம் பழங்களும் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் தினசரியில்.
ஐந்து பைசா,பத்து பைசா "சீட்டு" கிழிக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
சர்பத்,பழரச கடைகளில் பாதி கழுவப்பட்ட கண்ணாடி தம்ளரில் சர்பத்தை உறிந்துகொண்டே கடைக்கண் பரிமாற்றங்கள்
நடந்தேறும்.
சுற்றிலும் மினுக்கும் சீரியல் பல்புகளின் பிரகாசத்தில் சாமி படங்களும், எம்.ஜீ.ஆர்,காந்தி,காமராசர் படங்களும் அணிவகுத்திருக்கும்.
சைடுவாக்கில் பலூனை இழுத்துபிடித்து சட்டென்று ஊதி சிரிக்கும் பலூன் விற்பவன் குழந்தைகளின் கணகளுக்கு ஹீரோவாக
தெரிவான்.
வார்த்தை பரிமாற்றங்களுக்கு வழியில்லாத தாவணிகள் அம்மனை கும்பிட்டுக்கொண்டே "அவுகளை" ஓரக்கண்ணால் பார்த்து/பேசி
பரவசமடையும்.
முழுக்கை சட்டையும் புதுச்செருப்பும் வெடிச்சிரிப்புமாய் தூள் கிளப்பும் இளைஞர்படை.
மேலத்தெரு,கீழத்தெரு,வடக்குத்தெரு,தெக்குத்தெரு எங்கும் நிறைந்திருக்கும் "குழாய்" ஸ்பீக்கர்.
தென்னந் தட்டியால் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டகையினுள் அம்மன் பவனி வருவதற்காக தயார் செய்யப்படும் "சப்பரம்".
கரகாட்டத்தை சுற்றிலும் கூட்டம் குவிந்திருக்கும். கும்பக்காரியின் கால்களில் மையல் கொண்டிருக்கும் ஊர் கண்கள்.
பாயும் போர்வையும் விரித்து வில்லுப்பாட்டு கேட்பதற்கு மக்கள் திரண்டிருப்பார்கள்.

2.
இன்று:


"அம்மன்கோவில் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம் - Fighter Team"
ப்ளக்ஸ் போர்டில் செல்போன் பேசியபடி நான்கு முகங்கள் கோவில் வாசலை மறைத்துக்கொண்டு இருந்தன.
நெல்லிக்காய் விற்ற இடத்தில் இப்போது கோர்நட்டா ஐஸ்கீரிம் விற்கிறார்கள்.
பட்டுத்தாவணிகளை காண மீண்டும் எண்பதுக்கு பயணிக்க வேண்டும். சுடிதார்புரியாகி இருந்தது கோவில்.
பலூனை ஊதுவதற்கு பதில் சிலிண்டரில் கேஸ் பிடித்து தருகிறார்கள்.சிறுவர்கள் பலூனை துறந்துவிட்டு வீடியோ கேம்ஸ் சிடி கடைகளில்
மொய்க்கிறார்கள்.
வில்லுப்பாட்டு பாட்டையும், "சிங்சாங்"கும் ரசிப்பதற்கு பூசாரியும் கடவுளும் மட்டுமே மிஞ்சி இருக்கிறார்கள்.
ஒன்பதிலிருந்து பத்து கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதற்கு "கோலங்களும்,செல்வியும்" காரணம் என்கிறார்கள்!!


3.
நாளை:


Platinum package பக்தர்களுக்கு வீடுதேடி வந்து கடவுள் தரிசனம் தருகிறார் எனலாம்.

16 comments:

said...

பழையன மீட்டுதல்! மாற்றங்களிலுருக்கும் புது சுகத்தை இனி நாம் அறிந்துகொள்ள வேண்டும். :)

said...

நிஜம்/கற்பனை?

said...

நிதர்சனமான வரிகள்..
வேதனை தரும் உண்மைகள்..
எதையோ தேடிக்கொண்டு இருப்பதை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் :-(

said...

நல்ல பதிவு.

உங்கள் கவிதையொன்றை ஆகஸ்ட் மாத 'வார்த்தை' இதழில் படித்தேன். வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

said...

ஒன்பதிலிருந்து பத்து கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதற்கு "கோலங்களும்,செல்வியும்" காரணம் என்கிறார்கள்!!--- SuperB!

said...

Really true....

said...

aamaa yentha koil thiruvizhakkup poneenga...........:)

azhagu!!

vazhththukal nila...

said...

கனவுகளால் மட்டும் திரும்ப பெற முடியும் நினவுகள்.......

said...

கனவுகளால் மட்டும் திரும்ப பெற முடியும் நினவுகள்.......

Kalaivani said...

Nalla Irukku NilaRaseegan...
ungal netraya indraya nalayai patriya intha padhivu...

said...

:) அருமை.

--வித்யா

said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள்..

சேரல்,

உங்கள் கவிதைகளை மணல்வீட்டில் வாசித்தேன்.அருமையான படைப்புகள்..வாழ்த்துகள் நண்பரே :)

said...

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் அதனால் பிளாட்டினம் பக்கேஜ் பக்தர்களுக்கு கடவுள் தரிசனம் தருவதில் தவறில்லை.

Praharika said...

Good Post. :)

said...

நிஜங்களின் தரிசனம்....

said...

Super.... Its real lines... Ippo ellam enge Kovil, Thiruvizha ellam... Idhai improvement nu solluvadha...vazhkai pala magichigalaiai izhakiradhu endru solluvadha??!!!