Tuesday, September 22, 2009

இரண்டாம் கருவறை

வார்த்தைகளால் விவரிக்க முடியாத உனதன்பில் திளைத்திருக்கிறது என் மனச்செடி. போர் தொடுக்கும் என் சுடுசொற்களையும்
சிறு மெளனத்தால் அழகாய் கடந்துவிடும் உனது லாவகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வர்ணங்கள் நிறைந்த மழையை என்னில்
எப்போதும் பொழிந்துபோகும் வெண்மேகம் நீ.

கரம் பற்றிக்கொண்டு கால்கள் மணலில் புதைய கடற்கரையில் என்னோடு நீ நடந்து வருகையில் நினைவுகளில் முகிழ்கிறதென்
கால்சட்டை பருவ நாட்கள். நீண்டதொரு ரயில் பயணத்தில் என் தோள் சாய்ந்துகொண்டு ஜன்னல்வழியே தூரப்பச்சையை ரசித்த
உனது கருவிழிக்குள்தான் நான் துயிலும் இரண்டாம் கருவறை இருக்கிறது.

முத்தங்களால் என் கன்னம் நனைக்கும் உன் எச்சில்கள் - அமுதசுரப்பிகள். சத்தமின்றி எனக்குள் யுத்தமொன்று உருவாகி அடங்கிப்போய்விடும்
உன் கோபத்தருணங்களில். சூழ்நிலை சிறைக்குள் நான் தவிக்கின்றபோதெல்லாம் உன் சாந்தப்பார்வையின் ஞாபகநிலவுகள் என்னில் பொழிந்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

என் நண்பர்கள் வியந்துபோகிறார்கள் எப்படி உனக்கு மட்டும் இரட்டை நிழலென்று. என் ஒற்றை உடலுக்குள்ளிருப்பது இரண்டு உயிர்கள் என்பதை எப்போது உணர்வார்கள்? நமக்கு மட்டுமே தெரிகின்ற சங்கேத வார்த்தையை நான் உச்சரிக்கும் போதெல்லாம் வெட்கத்தில் உன் முகத்தில் விதவிதமாய் பூக்கள் மலரும்.

நிறைந்த ப்ரியங்களுடன் உனக்கென நானெழுதும் கடிதங்களெல்லாம் கவிதைகளாகி விடுகின்றன. கவிதைகளெல்லாம் காதலாக மலர்கின்றன.
உன் உதட்டுச்சுழிப்பிலும் ஒற்றை மருவிலும் கால்சுற்றும் நாய்க்குட்டியாகி போனது என் ஆண்மை.

இவைபோன்ற கனவுகள் எப்போதும் அழகாய்த்தானிருக்கின்றன.

23 comments:

said...

உன்னை பாராட்டுவதற்கு வார்த்தைகள் வரவில்லை நண்பா, ஒரு முறை என்றால் சரி, இரு முறை என்றாலும் சரி, ஆனால் ஒவ்வொரு முறையும் உன் கவிதைகள் என் மனம் தொட்டு போவதனால், உன்னை பாராட்டவே சலித்து போய்விட்டது என் மனம். நீ வடித்த பல காவியங்களில், இது இன்னும் ஒரு மணி முத்து.

said...

க‌விதுவ‌மான‌ காத‌ல் க‌டித‌ம் அழ‌கா இருக்கு. வார்த்தைக‌ளின் தேர்வு அருமை.

said...

Nice Nilaa.....

said...

கனவில்
மட்டுதான் இதெல்லாம் சாத்தியமோ ஏன்
பாஸ் ???
அழகு இன்னம் நான்கு முறை படிக்கலாம்
ரசித்தேன்

said...

Idayathai thodum kavithai.Ovvoru sollum oru azhagana malar.Nenjam niraindha vaazhthukkal.
Anbudan,
Sampath.

Kalaivani said...

Romba azhaga Iruku...
ovvoru varigalumae migavum arputham nilaraseegan....
ungalai paraturathukku ennaku vaarththaigalae ilai....
but ana enna ellam kadisiya kanavayutae athan konjam varuththama irukku...
really nice.....
super....

said...

மிக அருமையான வரிகள். கவிதைகேற்ற படம் . பாராட்ட வரிகள் இல்லை . நன்றி :)

said...

enna nu solla
kalkureenga ponga
picture & kanavu
parata varthai illai
both are excellent
ella elaiganin kanavum ethu tha

said...

enna nu solla
kalkureenga ponga
picture & kanavu
parata varthai illai
both are excellent
ella elaiganin kanavum ethu tha

said...

kanavaa!!!

appadinaa,azhagaana kanavu!!

said...

onnu sollanum.........

nila rasigan ka(vi)thaikal...nu ippothaane maaththiyirukkeenga??

so,banner il idam illaamal....
ketta varangal yellaam border thaandi vanthuttu........
kavanichcheengala??

athu nallaayirukkunna appaadiye vittudunga:)

said...

வாழ்த்திய நட்புகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

இரசிகை,

கூகிள் குரோம் ப்ரவுசரில் சரியாகவே தெரிந்தது. IE ல்தான் சரியாக தெரியவில்லை. இப்போது மாற்றிவிட்டேன்.நன்றி.

said...

// Ejas Ahamed said...
enna nu solla
kalkureenga ponga
picture & kanavu
parata varthai illai
both are excellent
ella elaiganin kanavum ethu tha//

படம் தந்துதவிய "அடலேறு"விக்கு நன்றிகள் உரித்தாகட்டும் :)

said...

காதல் வலி கொடியது.. வார்த்தைகளால் எளிமையாக வடித்துள்ளீர்கள்.. வாழ்த்துகள்..

Anonymous said...

This one is sounding very good nilla....

said...

நிலா நிலா ஓடி வா
காதல் கவிதை கொண்டு வா

காதலாய் கனிந்து நிற்கிறது வரிகள் ;)

said...

Very very niceeeeeeeeeeee

Anonymous said...

கரம் பற்றிக்கொண்டு கால்கள் மணலில் புதைய கடற்கரையில் என்னோடு நீ நடந்து வருகையில் நினைவுகளில் முகிழ்கிறதென்
கால்சட்டை பருவ நாட்கள். நீண்டதொரு ரயில் பயணத்தில் என் தோள் சாய்ந்துகொண்டு ஜன்னல்வழியே தூரப்பச்சையை ரசித்த
உனது கருவிழிக்குள்தான் நான் துயிலும் இரண்டாம் கருவறை இருக்கிறது.

நிறைந்த ப்ரியங்களுடன் உனக்கென நானெழுதும் கடிதங்களெல்லாம் கவிதைகளாகி விடுகின்றன. கவிதைகளெல்லாம் காதலாக மலர்கின்றன.

மிகவும் அருமையாக இருக்கிறது வுங்கள் கடிதம். வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை. ஆனால் இதெல்லாம் கனவு என்றதும் சிறிது ஏமாற்றமாக இருந்தது. Mechanical life ஆகி விட்ட இந்த காலத்தில் இது போன்ற கவிதைகளும் கடிதங்களும் தான் வாழ்கையை வுயிர்போடு இருக்க செய்கிறது. நன்றி.

திரு

said...

மிகவும் அழகான கவிதை நிலா..........

இதுவரை நான் படித்த காதல் கடிதங்களில் மிகச் சிறந்த கவிதை இது தான்.

ஒவ்வொரு வரிகளை படிக்கும் போதும், எனக்குள் மழை அடித்த மகிழ்ச்சி.

படித்து முடித்து பல மணி நேரம் கழித்தும் என் உதட்டில் புன்னகை ஒட்டிக் கொண்டே இருந்தது.

எனக்கு பிடித்த வரிகள் இதோ.............

"உன் உதட்டுச்சுழிப்பிலும் ஒற்றை மருவிலும் கால்சுற்றும் நாய்க்குட்டியாகி போனது என் ஆண்மை"

நட்புடன்,
சுரேஷ்.

said...

..........-il thaan sariyaagath therinthathu.
...........-il sariyaagath theriyavillai.

2me yenakku ennannu theriyaathu:)

but,maaththinathu nallayirukku:)

nanthini said...

Nila enakkoru santhegam,

kadhalin valiyai kathalithavaral mattumey unaramudiyum, ennovo theriyala kathalil nan thotrathal kathaly pattri ellamey ennai mikavum pathikkirathu

Vino said...

oru kanaam yosithean...
sathiyam illai.. irrundahlum paravaillai...

Nee mattum illam nilarasigaaiyaga irrundhaal... un kavithaikalili kadhal konda naan, enrooo unmel kadhal kodurepeanoo ?

Anonymous said...

title is really nice........
the last line,
"இவைபோன்ற கனவுகள் எப்போதும் அழகாய்த்தானிருக்கின்றன. " made me to realize the beauty of this kavithai........really superb!!!