Tuesday, October 20, 2009

அப்பா சொன்ன நரிக்கதை
அப்பா சொன்ன நரிக்கதை
("சிறு"கதை)

1.

இந்த அப்பாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பத்து வயதான என்னிடம் இவ்வளவு பரிவாக
அப்பாவை தவிர யாரும் பேசியதில்லை. அம்மா எப்பொழுதும் வேலை வேலை என்று அலைபவள். காலை ஏழே முக்கால் ரயிலுக்கு
சென்றால் இரவு பத்து மணிக்கு மேல்தான் வருவாள். அவள் வருவதற்குள் நான் உறங்கிவிடுவேன். காலையில் எனக்கு
தலைசீவி விடும் நேரம் மட்டும் பேசுவாள். அப்பா மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவார்.
அப்பாதான் என்னை தூங்கவைப்பார். என் அருகில் அமர்ந்து கதை சொல்வார். காட்டில் நடக்கும் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை. சிங்கம்,புலி,கரடி எல்லாம் வசிக்கும் காட்டிற்குள் கதைவழியே அப்பா என்னை கூட்டிச்செல்வார்
ஒவ்வொரு கதையின் முடிவிலும் என் நெற்றியில் முத்தமிடுவார். நான் உறங்கியிருப்பேன்.
எங்கள் வீட்டில் அம்மா,அப்பா நான் மூன்று பேர் மட்டும்தான்.
அம்மா கொஞ்சநாளாக சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

2.

"எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ப்ரியா"

ஜன்னலோர இருக்கையில் நாவலுக்குள் மூழ்கியிருந்தவள் தலை உயர்த்தி பார்த்தேன். அவன் நின்றுகொண்டிருந்தான்.ரயில் சினேகன்.

"யெஸ்"

"உங்களுக்கு சம்மதம்னா உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்"

இதை எதிர்பார்க்கவில்லை நான்.உடைந்த கண்ணாடி சில்லுகளாய் சிதறிப்போன வாழ்க்கையிலிருந்து மெல்ல இயல்புக்கு
திரும்பும் தருணத்தில் அவனது இந்தக்கேள்வி எனக்குள் பல கேள்விகளை கேட்டுப்போனது. விரக்தியான புன்னகையில்
அவனை கடந்து ஸ்டேஷனில் இறங்கி நடந்தேன். அவனது உருவம் செவி வழியே இதயம் புக முயற்சித்துக்கொண்டிருந்தது.
நாளை சம்மதம் சொல்ல மனசு விரும்பியது. சொல்வேன்.

3.

அப்பா நான் கேட்கும் எதையும் மறுத்ததில்லை. உடனே வாங்கி தந்துவிடுவார். தினமும் அப்பா சொல்லும் கதை கேட்பதற்காகவே
இரவுக்காக காத்திருப்பேன். இன்றும் அப்படித்தான் காத்திருந்தபோது,அருகில் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார்.இன்று நரிக்கதை.
சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ அரவம் கேட்டது.
அப்பாவின் சட்டையை கிழித்துக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பாவிடம்
சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தாள்.நான் தூங்கிக்கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து கண்கள் கசக்கி பார்த்தேன். எதற்காக அப்பாவை திட்டுகிறாள் என்று புரியவே இல்லை.

தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தார் என் இரண்டாவது அப்பா. கலைந்திருந்த என் ட்ரஸ்ஸை சரி செய்துகொண்டே எழ முயன்றேன்.முடியவில்லை.

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009]

53 comments:

said...

:( கலிகாலத்தில் இப்படிக்கூட நடக்கலாம்..
அருமையான கதை.
உண்மையாகவே 'நச்' திருப்பம்...
வெற்றி உங்கள் "அப்பா சொன்ன நரிக்கதை" 'சிறு'கதைக்குதான்.
வாழ்த்துகள் நிலா..!!

said...

முடிவில் சொல்லாமல் சொல்லி திடுக்கிட வைத்த தீ, மனதை பொசுக்கிப் போட்டது போல் வலித்தது அண்ணா.

இப்படியும் சில பாதகங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

nanthini said...

kadhaiyaha irunthalum vendamey indha mudivu

said...

sorry...pa

intha mara mandaikku puriyala..:(

said...

நன்றி செளமியா,அந்தோணி,நாணல்,நந்தினி,இரசிகை.

said...

பாத்தியா உன் நண்பர்களும் தான் இருக்காங்க உன்ன மாதிரியா எப்படி அழகா கதை எழுதறாங்கனு, நீயும் தா இருக்கயே.வேஸ்ட் டா நீ..
(இது நான் என்னைய சொல்லிக்கிட்டது)
உண்மையாலுமே நச் தான்.
முதல் பரிசு தட்டி செல்ல வாழ்த்துக்கள் நண்பா.

said...

வெற்றிப் பெற வாழ்த்துகள்.

said...

நன்றி அடலேறு,ஜெசீலா.

said...

கதை நன்றாக இருக்கு வெற்றிக்கு வாழ்த்து நிலா.

said...

வாழ்த்துக்கள் நிலா.

said...

அருமை. முதல் பாகத்தில் அப்பா ஆறு மணிக்கு வருவதும், முடிவில் சிகப்பு பொட்டு,

மூன்றாவதில் நரி கதை, எழுந்து நடகக் இயலாமை.. பொட்டில் அறைந்தார் போல் இருந்தது சூப்பர்.

கேபிள் சங்கர்

said...

திருப்பம்னா இதுதான் நிலா திருப்பம்... செம நச்சுங்க உங்க கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள் நிலா ...

said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துககள்!

said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்
அண்ணா

said...

மிகச்சரியாக கதையை புரிந்துகொண்டீர்கள் கேபிள்சங்கர்ஜி.:)

நன்றி.

ஷைலஜாக்கா,அருணா,நிலாவன்,எவனோ ஒருவன்,அமுதன் அனைவருக்கும் என் நன்றிகள்.:)

said...

தலைப்புக்கூட “நச்” சென்று பொருந்தியுள்ளது.

said...

நன்றி ஜனா :)

said...

நிலா.., அழகாக கதை கூரிய விதம் அருமை...

said...

நான் எதிர்பார்த்த முடிவுதான்..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்...

Anonymous said...

கொடுமை. இப்படி நினைக்க வைத்ததே உங்கள் கதையின் வெற்றி. வாழ்த்துக்கள்.

said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

ரெண்டு தடவ முடிவ படிக்க வேண்டியிருந்தது. நல்லாருக்கு! அந்த ரூட்டில நம்ம திங்கிங் போகதப்ப திடீர் திருப்பம்!

said...

நன்றி தன்னிலவன்,பரமேஸ்வரி,சின்ன அம்மிணி,ராதாகிருஷ்ணன் மற்றும் பப்பு :)

Anonymous said...

Migavum arumai...

Thanks,
Chandra

said...

Nice story Nila...
Best wishes :)

கலைவாணி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் நிலாரசிகன்....
கதை எழுதியவிதம் நல்லா இருக்கு...
இப்படி ஒரு திருப்பம் எதிர்பார்த்தேன் 2ம் பத்தி படிக்கும்போது...
ஆனால் சொல்லாமல் சொல்லி முடித்தவிதம் மிகவும் நன்றாக இருந்தது...
அப்பறம் முதல் முறை முதல் பத்தி படிக்கும் போது சாதரணமாக இருந்தது...
இரண்டாம் முறை படித்த போது இருவேறு அர்த்தம் தரும் படி எழுதிய விதம் அருமை...
சிறுமியோட அறியாமையையும் குழந்தை தனத்தையும் மிஸ் யூஸ் செய்யும் இரண்டாம் அப்பாவின் கொடுமையை நினைச்சா கதையா இருந்தாலும் கஷ்டமா தான் இருக்கு...
கதையின் தலைப்பும், படமும் பொருத்தமாக இருக்கு....
போட்டிக்கு பொருத்தமான நச் கதைதான்...
மீண்டும் வாழ்த்துக்கள்.
நன்றி.

said...

கதையின் முடிவில் நல்ல திருப்பமிருந்தது.

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

said...

நன்றி சந்திரா,நிலவின்மகள்,கலைவாணி மற்றும் கிரகாம் :)

said...

படித்தேன் :)

said...

கதை ok

said...

சிவப்புப் பொட்டுனு படித்ததும் கொஞ்சம் ஊகிக்க முடிந்தது ஆனால் கடைசி பத்தியில் வரும் திருப்பத்தை நான் எதிர்பாக்கலை ! இது போல நடக்கிறது தான் என்றாலும் படிக்கும் போது வேதனையைத் தருகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் நிலா ! கிட்டதட்ட வெற்றி பெற்றதாகவே தோன்றுகிறது ;)

ஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)
http://vennilapakkangal.blogspot.com/2009/10/500-2009.html

said...

மிக்க நன்றி அரவிந்தன்.
உங்கள் கதையை படித்தவுடன் பின்னூட்டமிடுகிறேன்.

said...

வெற்றி பெற வாழ்த்துகள் நிலா ரசிகன்

-ப்ரியமுடன்
சேரல்

said...

நச் ரொம்ப ரொம்ப வலிச்சுது. :(

said...

// nanthini said...
kadhaiyaha irunthalum vendamey indha mudivu
//

அதே ! அதே !!

said...

மனதை உலுக்கியது கதை. பாராட்டுக்கள்.

said...

வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி :)

said...

சர்வேசன் டாப் 20 லிஸ்ட்டில் செலெக்ட் ஆனதற்கு வாழ்த்துக்கள். (டாப் 20 ல் நானும் கூட ஓரமா இருக்கேன் )

Anonymous said...

Nacchendru ulagirku solla, evvalovo positive visayangal irukka, engeyo sila idangalil nadakkum crime subject ana negative karuvai ean therndheduthadin nokkamenna? Any way director Balachandar pola, vithiyasamana uravugalai yum, kevalamana paathirathaiyum.. 3 parakkalil vilakki, climax ai surukki.. 'kadhai ai kaiyanda vidham' ungalin eluthu anubava mudhirvai kaattugiradhu..! - "NilaRaseeganukku vetrigal kuviyattum.. Pirai Nilavu 'Pournamai' agave Nilaikkattum..!" Vazthukkal

said...

kathai kadaisiel kankalangavaithuvittathu.
really i never expect like astory.
it gives the feeling like the film 'mahanathi'.

said...

Excellent Story...

said...

நன்றி வெட்டிப்பயல் :)

Anonymous said...

வெற்றிக்கு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே..

said...

கெலிச்சுட்டீங்க.
வாழ்த்துக்கள்.

ஈ.மடலில் தொடர்பு கொள்ளவும், விவரங்கள் இங்கே:
http://surveysan.blogspot.com/2009/12/2009.html

said...

இரண்டாவது பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் நிலா :)

said...

இரண்டாம் பரிசுக்கு வாழ்த்துகள்..

எனக்கு இன்னும் கூட கொஞ்சம் புரியவில்லை.. முதல் மற்றும் மூன்றாம் பாகமே கதையை முழுதாக சொல்லி விடுகிறெதே.. இரண்டாம் பாகம் எதற்கு.. அது என்ன சொல்ல வருகிறது.. ப்ரியா என்பதுதான் அம்மாவின் பெயரா?

said...

நச் கதை போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் :)

கதையின் வடிவம் சிறப்பாக வந்திருக்கிறது.

said...

excellent narration and congratulations too

said...

Adada, ithu allavo siru kathai. ithayathai norungach cheithuvittathu. Intha kathaiyil varum kulla nariyai pondra kayavargalai natu roadil nikka vechu sudanum...

said...

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை.

said...

contest officially closed.
thanks for the participation and congrats for winning.

prize money is dispatched, as i mentioned in the email.