Wednesday, April 28, 2010

கவிஞர்களின் கவனத்திற்கு:

புன்னகை சிற்றிதழ் தனது அறுபதாவது இதழ் வெளியீட்டை முன்னிட்டு அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட தீர்மானித்திருந்தது. அதைப்பற்றிய அறிவிப்பை இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். இப்போது இதழ் தயாராகிவிட்டதாக அதன் ஆசிரியரும் கவிஞருமான திரு.அமசப்ரியா தெரிவித்திருக்கிறார். வருகின்ற வெள்ளிக்கிழமை(30 ஏப்ரல்) மாலை ஐந்து மணிக்கு அவரது நூல் வெளியீடு சென்னையிலுள்ள தேவநேய பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அங்கே புன்னகையின் அறுபதாம் சிறப்பிதழும் கிடைக்கும். ஒரு நூலின் விலை ரூ.20. விரும்பும் அன்பர்கள் பெற்றுக்கொள்ளலாம். தேர்வான கவிஞர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1.அகநாழிகை.பொன்.வாசுதேவன்
2.உமாசக்தி
3.உயிரோடை லாவண்யா
4.சகாரா தென்றல்
5.வா.மணிகண்டன்
6.கென்
7.காயத்ரி சித்தார்த்
8.ஒளியவன்
9.மகிழ்நன்
10.அருணா
11.ராமலஷ்மி
12.சா.முத்துவேல்
13.நிலவின்மகள்
14.சேரல்
15.சம்யுக்தா
16.கனியன் செல்வராஜ்
17.பிரபாவரசன்
18.அமல் ஜான்
19.ஆ.முத்துராமலிங்கம்
20.லதாமகன்
21.மணிகண்டன்
22.கவின்
23.உழவன்
24.ஜனமித்ரன்
25.கார்கோ
26.நிலாரசிகன்.

சிலரது பெயர்கள் விடுபட்டிருக்கலாம். சிலரது பெயரில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். பொறுத்தருள்க :)

 

மற்றவை:

1. எதிர்பார்க்காத பல விஷயங்களை கடந்து சென்றிருக்கிறது இவ்வருட ஐ.பி.எல். சச்சின்,ராயுடு,திவாரி,போலார்ட் என அற்புதமான வீரர்களை கொண்ட மும்பைக்கு வெற்றி கிடைக்கும் என்று நினைத்தேன். 2003 உலககோப்பை இறுதி போட்டியில் வாடிய முகத்துடன் பார்த்த சச்சின் ஞாபகத்திற்கு வந்தார்.தோனிக்கு மச்சத்தில் உடம்பு. இதே வேகத்தில் உலக கோப்பையை வென்றால் மகிழ்ச்சி.

2. நண்பர் சுபைருக்கு ஞாயிறன்று திருமணம். அவரை வாழ்த்த விரும்பும் அன்பர்கள் http://ahamedzubair.blogspot.com/ செல்லவும். என்னுடைய "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்' நூலிற்கு விமர்சனம் எழுதி இருக்கிறார். சுட்டி: http://ahamedzubair.blogspot.com/2010/04/blog-post.html அவருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

3. தோழி உமா சக்திக்கு நாளை பிறந்தநாள் (29 ஏப்ரல்). வாழ்த்து தெரிவிக்க விரும்பும் அன்பர்கள் இங்கே தெரிவிக்கலாம் --> http://www.umashakthi.blogspot.com/

-நிலாரசிகன்.

15 comments:

said...

kavingarkalukku.....
subaiyaruku.....
uma-ku........ VAAZHTHUKAL...:)

said...

தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

said...

நமது நண்பர்கள் பலரின் பெயர்கள் இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி.

said...

தகவலுக்கு நன்றி தோழரே!

-ப்ரியமுடன்
சேரல்

said...

நன்றி நிலாரசிகன்:)!

said...

தேர்வான நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

நானும் 3 அனுப்பியிருந்தேன். ஒன்று தேர்வாயிருக்கிறது என தொலைபேசினார் கவிஞர் அம்சப்ரியா.ஆனா இந்த பட்டியலில் என் பெயர் இல்லை.

//சிலரது பெயர்கள் விடுபட்டிருக்கலாம். //
இதுதான் காரணமோ ?!?! :)

said...

அடடா..நான் கவிஞராயிட்டேனா????சொல்லவேயில்லை!....நன்றி! நன்றி!

said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. :-))

said...

Vetri Perra Anaivarukkum Manamaarntha Vazhththukkal...

NilaRaseeganin kanavugal sutiyai subairin pakkathil padithaen... Vimarsanam Arumai.. Vazhthukkal NilaRaseegan...

Subairukku Thirumana Naal Vazhthukkal..

Umasakthikum Piranthanaal Vazhthukkal...

Nanri

said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

said...

தகவலுக்கு நன்றி நண்பா.. இன்று சந்திப்போம்

said...

நமது நண்பர்கள் பலரின் பெயர்கள் இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி.

said...

நன்றி நிலா.

said...

தகவல்களுக்கு நன்றி நிலா!

நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

said...

கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
நிலாரசிகன் அவர்களே,
உங்கள் தளம் திறக்க அதிக நேரம் எடுக்கிறது. விருப்பமிருந்தால் அந்த குறிப்பிட்ட நிரலியை தூக்கிவிடுங்கள்.

http://tools.pingdom.com/?url=http://www.nilaraseeganonline.com/2010/04/blog-post_28.html&treeview=0&column=objectID&order=1&type=0&save=true