Monday, December 06, 2010

எழுத்து திருட்டு: வலைப்பதிவர்கள் கவனத்திற்கு

ஒரு நீண்ட இரவை கடக்க வைத்து பின்பு வெளிக்குதிக்கலாம். ஒரு ஆழ்நிலைக்குள் நம்மை இழுத்து
வெளியேறலாம். தியானவெளியில் பித்தனாக அலைந்து திரியவைத்து பின்னொரு  மெளனப்புன்னகையுடன் அருகில் வந்தமரலாம். யாருமற்ற பாலையில் ஒரு துளியாக விழுந்து கடலென விரியலாம்.

கவிதை: வெறும் வார்த்தைகள் அல்ல. கவிதை: வார்த்தைகளின் வர்ணமடிக்கும் வெற்று வேலையில்லை. கவிதை: வலி நிவாரணி மட்டுமே அல்ல. கவிதை: மழை மட்டும் அல்ல.

கவிதை ஒரு தவம். கவிதை இன்னோர் உயிர். கவிதை வெற்றிடங்களை நிரப்பும் புனிதநீர். கவிதை அகக்கடலின் பிரவாகம். கவிதை ஆன்மாவின் வரிவடிவம்.

ஒவ்வொரு கவிதை எழுதி முடிக்கப்பட்ட பின்னும் தோன்றும் உணர்வை  எழுத்தில் எப்படி வடிப்பது? அந்த உணர்வின் உச்சத்தில் கரைந்தோடும் கண்ணீரும் பின் சிந்தும் புன்னகையும் உணர்ந்தால் மட்டுமே கவிதையின் கனம் என்னவென்பது புரியும்.


இத்தனை விஷயம் கவிதைக்கு பின் நிகழ்கிறது என்பதை அறியாத ஒரு 'புத்திசாலி'  2009ம் ஆண்டு நானெழுதிய ஒரு பதிவை அப்படியே அப்பட்டமாக தன் வலைப்பூவில் பதிந்திருக்கிறார்
தென்றல் என்கிற பதிவர்.

என் இடுகை:


http://www.nilaraseeganonline.com/2009/09/blog-post_28.html


"தென்றலின்" இடுகை:


http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_3679.html


இதைப்பற்றி பண்புடன் குழுமத்தில் எழுதியிருந்தேன் நேற்றிரவு. அதற்கு நண்பர் விழியன் இட்ட மறுமொழி மேலும் அதிர்வுக்குள்ளாக்கியது.

இந்த தென்றல் என்கிறவர் பிறரது பதிவுகளை திருடுவதையே பிழைப்பாக கொண்டிருக்கிறார் போலும்!

விழியனின் மறுமொழி:

//

Umanath Selvan
இது ஒன்னு மட்டும் இருந்தா பரவாயில்ல நிலா

இங்க பாருங்க
http://pushpalatham.blogspot.com/2010/08/blog-post.html
http://kavithai.yavum.com/content/view/140/1/
...தன் தோழிக்கு எழுதிய கடிதத்தை கூட இப்படியா கொடுக்கனும்?

மேடம் பல தளங்களில் இருந்து பத்தி பத்தியா உருவி ஒரு கட்டுரை போட்டிருங்காங்க
http://pushpalatham.blogspot.com/2010/08/blog-post_17.html
ஒவ்வொரு வரியையும் கூகுளிடவும்.

http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_20.html
ஆனந்த விகடனில் வந்த கட்டுரையாம் :)))

http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_6687.html

நான் இந்த ஆட்டத்துக்கு வரல.

எல்லோரும் போன் போட்டு ஒரு வார்த்தை கேக்கலாம். அவங்க ப்ளாகில் போன் நம்பர் இருக்கு.//

முதலில் ignore செய்துவிடவே எண்ணியிருந்தேன். ஆனால் இவரை போன்ற புல்லுருவிகளை இனியாவது தடுக்க வேண்டும். இவரது வலைப்பூவை தமிழ்மணம்/இன்ட்லி தடைசெய்யவேண்டும்.

உலகின் மிக மோசமான திருட்டு அடுத்தவரின் சிந்தனையை திருடுவது. என்ன செய்யலாம் நண்பர்களே!

-நிலாரசிகன்.

31 comments:

said...

என்ன செய்ய? என்ன செய்தாலும் இவரை போன்றவர்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர்

said...

நிலாரசிகன்,

மிகவும் மோசமான மற்றும் கேவலமான செயல்.
மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு அவருக்குப் புரிய வையுங்கள்.

தெரியாமல் செய்திருந்தால் திருத்திக்கொள்வார்.

said...

Lk,

நன்றி..

said...

// எண்ணத்துப்பூச்சி said...

நிலாரசிகன்,

மிகவும் மோசமான மற்றும் கேவலமான செயல்.
மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு அவருக்குப் புரிய வையுங்கள்.

தெரியாமல் செய்திருந்தால் திருத்திக்கொள்வார்.//

எண்ணத்துப்பூச்சி,

நண்பர்கள் அழைத்து பேசியிருக்கிறார்கள்.தெரிந்து செய்திருக்கிறார் நண்பா.

said...

"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது "
இன்னைக்கு இவங்க ... நாளைக்கு வேற யாரோ :( .
நீ சொன்னா மாதிரி சிந்தனை திருட்டு பயங்கரமானது தான்

said...

என்னத்த பண்றது..திருட்டு திருட்டுதான் ஆனால் மன்னிக்கவேண்டும்..

said...

ada en kathaiyum athee thaanngka
pathivee pooda pidikkaama irukkeeen

summa ippadi ingku maddum illaa ellaathththilum irukkiRaarkaL

www.samaiyalattakaasam.blogspot.com
pathivu athaththanaiyum copy seythu blog aarampiththu irukkaangka.
k

said...

Nila,

unable to open her blog. it says Not Found,Error 404....

i think she must be in want of fame. sometime some lonely ppl may do it. dont get perturbed for these issues. If your writings are strong it will stand the test of time, just ignore these things and keep going.

said...

என்ன செய்தாலும் இவரை போன்றவர்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர்

said...

இது வருந்தத்தக்க செயல். கண்டனத்துக்குரியது.

said...

'வலி'

மிகச் சரியாக வகைப் படுத்தி விட்டீர்கள்.

said...

வருத்தம் அளிக்கிறது! அவருக்கு எடுத்து சொல்வதன் மூலம் திருத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அவர் ஏதோ ஒரு ஆர்வத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பதிவேற்றி இருக்கலாம். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு "Benefit of doubt" தாருங்கள். அவராகவே திருத்திக் கொள்ள வேண்டும்.

said...

ரொம்ப மோசமான திருட்டா இருக்கே!!!!

என் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

துளசிதளத்தில் இருந்து எதாவது திருடியிருந்தால், தெரிஞ்சவுங்க கொஞ்சம் எனக்குச் சொல்லுங்க.

said...

அந்த இன்னொரு பக்கத்தைக் காணவில்லை...

said...

:) Now she has restricted her site to Invited readers only ;) :D

Cheers!!!

said...

எங்கள் எவ்வளவோ விசயங்களை இழந்துதான் கதைகள் ,கவிதைகள் என படைக்கிறோம், ,படைப்பவனுக்கு தான் தெரியும் அதை திருடிய வலி...வெளியில் இருந்து கொண்டு பேசுவது எளிது நண்பரே...எழுதுவதன் பொருட்டு நிலா தூக்கிய சிலுவைகளை நான் அறிவேன்.
நிலா பேசாம நம்மளை மாதிரியான ஆட்கள் எழுதுவதை நிறுத்திவிடலாம் போலுருக்கு...இதையே ஒரு ஆண் செய்தால் சும்மா விடுமா பதிவுலகம்..பெண்கள் எதை செய்தாலும் நியாயம் என்று சொல்ல ஒரு கூட்டம்.இருக்கு

said...

ippadi yellam vera nadakutha :-(

said...

அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் சொன்னவை : தெரியாம செஞ்சுட்டேன் ஒரே அழுகையாம். இவருக்கு ரொம்பப் பாவமாப் போச்சாம் ( பொம்மநாட்டிகள் அழுதா அவருக்குத் தாங்காது கேட்டோ)

இனிமே அப்படிச் செய்யதேன்னு சொல்லிட்டாராம்

said...

தெரியாமல் செய்துவிட்டதாக மன்னிப்புக்கேட்டு மடலிட்டிருக்கிறார் புஷ்பா.

மன்னித்து மறப்போம்.

said...

நண்பரே...யார் அவர்??? என்னுடைய கவிதையையும் திருடி என் பெயர் நீக்கி பயன்படுத்தி இருக்கிறார்.....

http://kavithai.yavum.com/content/view/125/31/


http://karthikkavithaigal.blogspot.com/2009/08/blog-post_12.html

said...

இதுவும் கூட நான் எழுதிய கவிதை தான்....

http://kavithai.yavum.com/content/view/134/34/

said...

நண்பர்களே,

இன்று நண்பர் நிலா ரசிகன் அவர்களின் வலைப்பூவில் சென்று பார்த்தபோது அவருடைய கவிதைகள் திருடப்பட்டு ஒரு இணைய தளத்தில் அவர் அனுமதி இன்றி அவர் பெயரும் இன்றி பயன்படுத்தி இருப்பதாக எழுதி இருந்தார்...அவர் கூறிய அந்த இணைய தளத்தில் சென்று பார்த்த எனக்கு மேலும் அதிர்ச்சி...காரணம், என்னுடைய கவிதைகளையும் திருடி என் பெயரை நீக்கி என் அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதோ அந்த லிங்க்

http://kavithai.yavum.com/content/view/134/34/

http://kavithai.yavum.com/content/view/125/31/

அடுத்தவர்கள் கற்பனையை திருடும் அந்த இணையதள நிர்வாகி மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்....

அடுத்தவர்களின் சிந்தனையை சில்லரையாக்கும் இது போன்ற இழிவானவர்கள் இனியாவது திருந்தவேண்டும்...

said...

http://kavithai.yavum.com/content/view/139/37/

this is also my poem

said...

நண்பர்களே,

இன்று நண்பர் நிலா ரசிகன் அவர்களின் வலைப்பூவில் சென்று பார்த்தபோது அவருடைய கவிதைகள் திருடப்பட்டு ஒரு இணைய தளத்தில் அவர் அனுமதி இன்றி அவர் பெயரும் இன்றி பயன்படுத்தி இருப்பதாக எழுதி இருந்தார்...அவர் கூறிய அந்த இணைய தளத்தில் சென்று பார்த்த எனக்கு மேலும் அதிர்ச்சி...காரணம், என்னுடைய கவிதைகளையும் திருடி என் பெயரை நீக்கி என் அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதோ அந்த லிங்க்

http://kavithai.yavum.com/content/view/134/34/

http://kavithai.yavum.com/content/view/125/31/

http://kavithai.yavum.com/content/view/139/37/

http://kavithai.yavum.com/content/view/157/1/

அடுத்தவர்கள் கற்பனையை திருடும் அந்த இணையதள நிர்வாகி மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்....

அடுத்தவர்களின் சிந்தனையை சில்லரையாக்கும் இது போன்ற இழிவானவர்கள் இனியாவது திருந்தவேண்டும்...

said...

//தெரியாமல் செய்துவிட்டதாக மன்னிப்புக்கேட்டு மடலிட்டிருக்கிறார் புஷ்பா.
மன்னித்து மறப்போம்.//

நண்பரே,

தயவு செய்து என்னுடைய கவிதைகளையும் அவரின் இணையதளத்தில் இருந்து நீக்கிவிட சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..

http://kavithai.yavum.com/content/view/134/34/ http://kavithai.yavum.com/content/view/125/31/ http://kavithai.yavum.com/content/view/139/37/ http://kavithai.yavum.com/content/view/157/1/

என்றும் அன்புடன்
அ. கார்த்திகேயன்

said...

//தெரியாமல் செய்துவிட்டதாக மன்னிப்புக்கேட்டு மடலிட்டிருக்கிறார் புஷ்பா.

மன்னித்து மறப்போம்.//

Please give me her email address. she has used my poems also.........

said...

நிறைய பேர் இது ப்ஓலக் கிளம்பியிருக்காங்க போலிருக்கே!!!!
என் கதை ஒன்றை இளைய தமிழன் என்பவர் அப்படியே வெளியிட்டிருக்கிறார்!
என் கதை http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/01/blog-post_18.html
அவர் இடுகை
http://youngtamilan.blogspot.com/2009/12/blog-post.html#comments

Anonymous said...

Leave it... She cannot sustain...

said...

உன்னுடையதுமா? சேம் பிளட்..

said...

என் கவிதைகளும், சிறுகதைகளும் வெகு காலமாகவே திருடப்பட்டு வருகின்றன.
என் ப‌ல‌ க‌விதைக‌ள் திருட‌ப்ப‌ட்டிருந்தாலும் 'தோழியாகவே இருந்துவிடேன்' என்ற‌ த‌லைப்பில் நான் எழுதிய‌ ஒரு க‌விதை, இங்கே
http://rudhrakaaviyam.blogspot.com/2010/03/blog-post_07.html

'ப‌டுக்கைய‌றைக்கொலை' என்ற‌ த‌லைப்பில் நான் எழுதிய‌ ஒரு சிறுக‌தை, இங்கே
http://www.mannarweb.com/services_4.html
http://www.parantan.com/Kathai/main_p_01.html

இது ப‌ற்றி என் வ‌லைப்பூவிலும் நான் எழுதியிருந்தேன். ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இன்னும் திருந்த‌வில்லை போலும். ப‌டைப்புக‌ளை உருவாக்குப‌வ‌ர்க‌ளாகிய‌ நாம் ஏதேனும் செய்தே ஆக‌ வேண்டும்.

said...

"oru kal
oru kannaadi udaiyaamal mothik kondaal kaathal"

intha varikalai naa.muthukumar thannudaiya varikal ena pesik kondirukkum pothu...
kavikko vin puththakathil ithe varikalai vaasitha gnapakam ennai puratti pottuk kondirunthathu.

unmaileye...
ore vithamaai unara,sinthikka amaiyum tharunangal undu.
thaanaakave amayum athu pontra nikazhvukal azhakaanavai.

aanaal,
ingu neengal kurippittullathu..
varuththaththirkkuriyathu

:(