Saturday, January 01, 2011

வாசிக்க வேண்டிய சிறுகதை நூல்கள்



------------------------------------------------------------------------------------------------------------------------------
என் கவிதை நூல் "வெயில் தின்ற மழை" வெளியீட்டிற்கு வருகைதந்து ஊக்குவித்த நண்பர்கள்,சக பதிவர்கள்,அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விழா முடிந்தவுடன் பதிவிட நினைத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நன்றி தெரிவிக்க முடியாமல் போனது. மன்னிக்க.முகநூலிலும்,வலைப்பூவிலும் மட்டுமே சந்தித்த சில நண்பர்களை நேரில் கண்டது நெகிழ்ச்சி.

இணையம் மூலமாகவும் நூலைப் பெறலாம்: http://tinyurl.com/2uqqkta
சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் கிடைக்கும். அரங்கு எண்: F3
-------------------------------------------------------------------------------------------------------------------------------



அன்பெனப்படுவது ஒரு வதை
வதையெனப்படுவது ஒரு மாயை
மாயையெனப்படுவது ஒரு துயர்
துயரெனப்படுவது அன்பின்
மற்றொரு பெயர்!
  - இவ்வார விகடனில் வெளியான கவிதை ------------------------------------------------------------------------------------------------------------------------------- 
புத்தாண்டில் புத்தக கண்காட்சி துவங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. நண்பர்களுக்கு நான் வாசித்து மகிழ்ந்த நூல்களில் பட்டியலை தரலாமென்று நினைக்கிறேன்.இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள நூல் பட்டியல் தர வரிசையினால் அமைந்தது அல்ல.
சட்டென்று என் ஞாபகத்தில் மலர்ந்த வரிசை.பின்னூட்டங்களில் நண்பர்கள் நீங்கள் விரும்பிய நூலை பரிந்துரைக்கலாம்.

இனிய புத்(தக) ஆண்டு வாழ்த்துகள் :)

சிறுகதை தொகுப்புகள்:


1. வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்
2.பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
3.காட்டின் பெருங்கனவு - சந்திரா
4.புனைவின் நிழல் - மனோஜ்
5. மதினிமார்கள் கதை - கோணங்கி
6.ஊமைச்செந்நாய் - ஜெயமோகன்
7.ஏற்கனவே - யுவன் சந்திரசேகர்
8. பெய்தலும் ஓய்தலும்/தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் - வண்ணதாசன்
9.நகரம் - சுஜாதா
10.காட்டிலே ஒரு மான் - அம்பை
11. மரப்பாச்சி/தொலைகடல் - உமா மகேஸ்வரி
12.அழுவாச்சி வருதுங்சாமி/மண்பூதம் - வாமு.கோமு
13.பிராந்து/சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
14.பதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்
15.அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
16.புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்
17.வண்ணதாசனின் அனைத்து சிறுகதைகளும்
18.உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
19.ச.தமிழ்செல்வன் கதைகள் - தமிழினி வெளியீடு
20. மதுமிதா சொன்ன பாம்புக்கதைகள் - சாரு நிவேதிதா
21.மயில்ராவணன் -  மு.ஹரிகிருஷ்ணன்
22.அமெரிக்காகாரி - அ.முத்துலிங்கம்
23.புதுமைப்பித்தன் கதைகள்
24.மெளனி கதைகள்
25.தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
26.ராஜன் மகள் - பா.வெங்கடேசன்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூறு சிறுகதைகளின் பட்டியல்
இங்கே இருக்கிறது. வாசித்து மகிழுங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------


வருடத்தின் முதல் கவிதை:


நட்சத்திராவின் வானம்


கைகள் நிறைய பூக்களுடன் நின்றிருந்தாள்
நட்சத்திரா.
கதவு திறந்து உள் அழைத்தேன்.
சிறு சிறு பூக்களால் அறை நிரப்பினாள்.
பின்,
விரல்கோர்த்துக்கொண்டு
மடியிலமர்ந்து கதைகள் ரசித்தாள்.
அனைத்து கதைகளிலும் பறவைகளே
அவளை அதிகம் கவர்ந்தன.
விடைபெறும் தருணம்
அவளிடம் வானமும்
என்னிடம் சிறகுகளும் இடம் மாறியிருந்தன.

-நிலாரசிகன்.

13 comments:

said...

வருடத்தின் முதல் கவிதையே மிக அருமை .
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

said...

வருடத்தின் முதல் கவிதையே மிக அருமை .
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள் நிலா!

பகிர்விற்கு நன்றி.

said...

கவிதை அழகு...

புத்தகங்களை தேடிப்பிடிக்க முயல்கிறேன் நூலகத்தில்...

said...

வருடத்தின் முதல் கவிதையே மிக அருமை.
புத்தக அறிமுகம் நன்று.
நம்ம வாசலுக்கும் வந்திட்டுப் போறது.

said...

நன்றி தீபா.

said...

நன்றி பா.ரா. அன்று தங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி :)

said...

நன்றி வெறும்பய

said...

நன்றி சே.குமார். அவசியம் வருகிறேன் :)

said...

//விடைபெறும் தருணம்
அவளிடம் வானமும்
என்னிடம் சிறகுகளும் இடம் மாறியிருந்தன//


Nice :)

said...

நிலா.. கவிதைத் தொகுப்புகளும் குடுங்க..

said...

வருடத்தில் முதல் கவிதை அருமை.

விகடனில் உங்கள் கவிதை வெளியாகியுள்ளது
வாழ்த்துக்கள் அண்ணா

said...

kavithai nallaayirukku....


ippo new year wishes sonnal nallaayirukkaathu....:)