Sunday, December 02, 2012

துயரத்தின் முடிச்சுஅந்தரவெளியில் மிதக்கிறது.
யாருடைய முடிச்சாகவும்
இருக்கலாம்.
வாழ்வின் துயர்மிகுந்த
காட்சிகளால் நிரம்பி 
தளும்புகிறது.
இரவின் கண்களில் 
நதியாகி வளைகிறது
குருதி.
அவிழ்ந்துவிட முயன்று
முடியாமல் தோற்று
முடிச்சுக்குள் முடிச்சாகி மூழ்கிப்போகிறது
காலம்.
ஓர் உன்னத காதல் முடிச்சின்
மறுபக்கத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
எக்கணமும் அவிழ்க்க இயலாத
துயரத்தின் முடிச்சொன்று.
-நிலாரசிகன்.

1 comments:

said...

காலம் தான் முடிச்சை அவிழ்க்க வேண்டும்...
tm1